ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரியில் முப்பெரும் விழா

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மொழித்துறை சார்பில் முப்பெரும் விழா நடைப்பெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட கவிஞர் கவிதாசன் மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.

இம்முப்பெரும் விழாவில் கல்லூரியில் பாரதி நினைவு நூற்றாண்டு, தமிழ் மன்றத் தொடக்க விழா, தன்னம்பிக்கை மன்ற தொடக்க விழா போன்றவை தொடங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக சிந்தனை கவிஞர் கவிதாசன் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி விழாவினை தொடக்கி வைத்தார். கல்லூரியின் மொழித்துறைத்தலைவர் விஸ்வநாதன் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார். பின்னர் பேசிய சிறப்பு விருந்தினர் கவிதாசன், கல்லூரியின் தமிழ் வளர்ச்சி செயல்பாடுகளை வாழ்த்திப் பேசினார்.

மேலும் இன்றைய சூழலில் பாரதியை ஏன் வாசிக்க வேண்டும் என்பதையும் அவர் படைப்புகள் தன் வாழ்வில் எவ்வாறு மாற்றங்களுக்கு வித்திட்டது என்பதைப் பகிர்ந்தார்.