கே.பி.ஆர் கல்லூரி சார்பில் பழங்குடி கிராமத்தில் “உலக எழுத்தறிவு தினம்”

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி மற்றும் உன்னத் பாரத் அபியான், தேசிய சேவை திட்டம் சார்பில் கோவையில் “உலக எழுத்தறிவு தினம்-2021” கொண்டாடப்பட்டது, மேலும் சமீபத்தில் ஈரோடு மாவட்டம், கொங்கடை கிராமம் குடியிருப்பு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தேவைப்படும் நோட்டுப் புத்தகங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்க்கள் வழங்கப்பட்டது.

அவர்களிடம் ஒரு நிலையான வாழ்க்கைக்கான கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. பழங்குடி குடியிருப்பு மாணவர்களுக்கான தெருவகுப்புகள் மற்றும் பல விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. “ஒரு மாணவர்-ஒரு மரம்” பிரச்சாரம் பள்ளி வளாகத்தில் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தை கேபிஆர் குழுமங்களின் தலைவர் கே.பி.ராமசாமி, அவர்களின் வழிகாட்டுதலில், கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி முதல்வர் அகிலா, மற்றும் சி.இ.ஓ.  நடராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சி சத்தி, சுதர் அறக்கட்டளை இயக்குனர் நடராஜ் முன்னிலையில் டாக்டர் கார்த்திகேயன், சமூக சேவைகளின் ஒருங்கிணைப்பாளர், முன்னாள் மாணவர் உறவுகள் அலுவலகத்தின் தலைவர் டாக்டர் அனில்குமார் மற்றும் என்.எஸ்.எஸ். மற்றும் யு.பி.ஏ ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.