இன்போசிஸின் புதிய டிஜிட்டல் வர்த்தக தளம்: ‘ஈக்வினாக்ஸ்’ அறிமுகம்

டிஜிட்டல் சேவைகளை வழங்கிவரும் இன்போசிஸ், ஷாப்பிங் அனுபவத்தை வழங்க ஈக்வினாக்ஸ் என்னும் புதிய டிஜிட்டல் வர்த்தக தளத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த தளம் ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் வர்த்தகம் மேற்கொள்ளும் வணிகத்திலிருந்து வணிக நிறுவனங்களுக்கும், வணிகத்திலிருந்து வாடிக்கையாளர்களுக்கும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்களுக்கு சிறப்பான சேவை வழங்குவதோடு ஷாப்பிங் செய்பவர்களின் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிக்கிறது.

இன்போசிஸ் ஈக்வினாக்ஸ் சில்லறை வணிகம், சிபிஜி, தொலைத்தொடர்பு, உற்பத்தி, வாகன மற்றும் ஊடகங்களில் பல முன்னணி உலகளாவிய நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது, இன்போசிஸ் ஈக்வினாக்ஸ் வளர்ந்து வரும் சோஷியல் மீடியா, சேட், வாய்ஸ் மற்றும் வளர்ந்தரியாலிட்டி காமர்ஸ் சேனல்களைப் பயன்படுத்தி தனித்துவமான வாடிக்கையாளர் பயணங்களை வழங்க பிராண்டுகளை இயக்குவதன் மூலம் நெருக்கமான நுகர்வோர்பிராண்ட் தொடர்புகளை எளிதாக்குகிறது.

இது குறித்து இன்போசிஸ் நிர்வாக துணைத் தலைவரும் சில்லறை மற்றும் தளவாடங்கள் பிரிவின் உலகளாவிய நுகர்வோர் தலைவருமான கர்மேஷ் வாஸ்வானி கூறுகையில்: நுகர்வோரின் துடிப்புடன் பொருந்தக்கூடிய தனித்துவமான ஷாப்பிங் அனுபவங்களை உருவாக்க இது ஒரு மனித-மைய அணுகுமுறையைத் தழுவி உள்ளது. இது இதர தீர்வுகளை காட்டிலும் வணிகத்திலிருந்து வணிகம்மற்றும் வணிகத்திலிருந்து வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தீர்வு அளிக்கும் ஒரே தளமாக உள்ளது. இன்போசிஸ் ஈக்வினாக்ஸ் சுறுசுறுப்பு மற்றும் தகவமைப்புக்கு இடையே சரியான சமநிலையை வழங்குகிறது. சவால்களை எதிர்கொள்ளும் நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு இது ஒரு சிறந்த வழியாகும். என்று தெரிவித்தார்.