ரத்தினம் கல்லூரி, ஆர்பிடோ ஆசியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கோவையில் உள்ள ஆர்பிடோ ஆசியா ஆய்வகத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் நிறுவனங்களில் அறிவியல் துறையில் வேலை பெறுவதற்காக மாணவர்களை பலவேறு உபகரணங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு அடிப்படையிலான பயிற்சிகளில் ஈடுபடுத்தும் முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் ஆர்பிடோ ஆசியா லேப்ஸ் மற்றும் ஸ்கேன் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் ரத்தினம் குழும நிறுவனங்களின் தலைவர் மதன் அ. செந்தில், ரத்தினம் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் செயலாளர் மாணிக்கம், ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முரளிதரன், ஆர்பிடோ ஆசியா ஆய்வகத்தின் மேலாண்மை இயக்குநர் தரணி, செயல்பாட்டுத் தலைவர் டாக்டர் ஜெமிமா, ஆர்பிடோ ஆசியா உதவி ஜி.எம் யாகவேந்திரன் ஆகியோரின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ரத்தினம் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் சேர்மன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் முக்கியத்துவத்தை தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு அணுகும் முறைகளை தங்களது உரையில் எடுத்துரைத்தனர்.

ஆர்பிட்டோ ஆசியா டயக்னாஸ்டிக் ஆய்வகத்தின் மேலாண்மை இயக்குனர் டாக்டர் தரணி கூறுகையில், தொழில் படிப்பைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு இந்த தருணம் நிச்சயம் நேர்மறையான முடிவை தரும், ஏனெனில் அவர்கள் ஒரு தொழில்முறை நிபுணர் ஆவதற்கு பயிற்சியளிக்கப்படுகிறார்கள். என்று கூறினார்.