Dr.நல்ல ஜி பழனிசாமியின் கனவு நனவாகியது

நடமாடும் பக்கவாத சிகிச்சை ஆம்புலன்ஸ் துவக்க விழாவில் காவல்துறை ஐஜி பாரி பெருமிதம்

கே.எம்.சி.ஹெச் மருத்துவனை சார்பில் பக்கவாத சிகிச்சை பிரிவு (மொபைல் ஸ்ட்ரோக் யூனிட்) அண்மையில் துவக்கப்பட்டது. இதனை கொடியசைத்து துவக்கி வைத்தார் கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன். மேற்கு மண¢டல ஐஜி எ.பாரி, ஸ்ட்ரோக் யூனிட்டின் ஹெல்ப் லைன் நம்பரை அறிமுகப்படுத்தினார். கோவை நகர போலீஸ் கமிஷனர் கே.பெரியய்யா, மொபைல் செயலியை அறிமுகப்படுத்தினார். கோவை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் கே.விஜயகார்த்திகேயன் பக்கவாத தீவிர சிகிச்சைப் பிரிவைத் துவக்கி வைத்தார்.

பக்கவாதம் பற்றிய விளக்கம்

பக்கவாதம் என்பது, மூளைக்கு ரத்தம் செல்வது பாதிப்படையும்போது, ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்பட்டு மூளை செல்கள் பாதிப்படையும். ஒவ்வொரு நிமிடமும் 17 லட்சம் செல்கள் இறக்கும் நிலை ஏற்படக் கூடும். கை, கால்கள் அசைக்க முடியாத நிலை ஏற்பட்டு, ரத்தக்குழாயில் அடைப்போ, வெடிப்போ ஏற்படும் பட்சத்தில், மூளைக்கு ரத்தம் செல்வது தடைபடுகிறது. இந்நிலையில், விரைவாக சிகிச்சை அளிக்கும்பட்சத்தில், நோயாளி குணமடைய வாய்ப்புள்ளது.

பக்கவாதம் ஏற்பட்ட மூன்று மணிநேரத்துக்குள் பாதிக்கப்பட்டவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். கேஎம்சிஹெச் (மொபைல் ஸ்ட்ரோக் யூனிட்), பக்கவாத சிகிச்சை, முதல் மூன்று மணிநேரத்தில் சிகிச்சை அளிக்கும் வசதி கொண்டது. இதில், ஒரு டாக்டர், ஒரு செலிவிலியர், ஒரு அவசர கால சிடி ஸ்கேன் தொழில்நுட்பம் அறிந்த ஒருவர் ஆகியோர் உள்ளனர். இதில், சிடி ஸ்கேன் மற்றும் பரிசோதனைக் கருவிகளும் உள்ளன.

ஆசியாவிலேயே முதன்முறையாகத் தொடங்கப்பட்டுள்ளது

இதுகுறித்து, கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி கூறுகையில்: கே.எம்.சி.ஹெச். அறிமுகப்படுத்தியுள்ள பக்கவாத சிகிச்சை பிரிவு (மொபைல் ஸ்ட்ரோக் யூனிட்) அனைத்து வசதிகளையும் கொண்டது. பக்கவாதம் ஏற்பட்ட ஒருவர், இந்த மொபைல் ஸ்ட்ரோக் யூனிட்க்கு போன் செய்தவுடன், அடுத்த மூன்று மணி நேரத்தில் நோயாளியை அடைந்துவிட்டால், இந்த வாகனத்தில் உள்ள சி.டி. ஸ்கேன் மூலம், ஸ¢ட¢ரோக¢ இரத்தக் கசிவினால் ஏற்பட்டதா அல்லது ரத்த உறைவினால் ஏற்பட்டதா என்று கண்டுபிடித்து விடலாம்.

இரத்த உறைவினால் ஏற்பட்டிருந்தால் கிளாட் பஸ்டிங் பண்ணுவர். இதனால் பக்கவாதத்திலிருந்து குணப்படுத்தலாம். கோவையிலிருந்து 100 கி.மீ வரைக்கும் இந்த சேவை அளிக்கப்படுகிறது. ஆசியாவிலேயே முதன்முறையாக இங்குதான் மொபைல் ஸ்ட்ரோக் யூனிட் சேவை தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இம்மருத்துவமனை சமூக சிந்தனையோடு செயல்படுகிறது

மேற்கு மண்டல ஐஜி எ.பாரி பேசுகையில்: மக்கள் மருத்துவமனையைத் தேடிப் போகின்ற இந்த நேரத்தில், மக்களை நோக்கிச் சென்று அவர்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆசியாவிலேயே முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த மொபைல் ஸ்ட்ரோக் யூனிட் சேவைக்காக இக்குழுவினைப் பாராட்ட வேண்டும். நிறைய பேருக்கு பக்கவாதம் என்றால் என்ன, அதனை எப்படி குணப்படுத்துவது என்பது தெரியாமல் தடுமாறுகின்றனர். இதயத்தில் வந்தால் மாரடைப்பு, மூளையில் வந்தால் பக்கவாதம். இந்த வாகனத்தின் மூலம் நோயாளியின் வீடுகளுக்குச் சென்று அங்கேயே சிகிச்சை அளிக்கின்றபோது, அழிந்து வருங்கின்ற செல்கள் காப்பாற்றப்பட்டு, ரத்தக் கட்டியை கரைத்து, உடைத்து நிரந்தரமான ஊனத்தை விடுவித்து மீண்டும் ரத்த ஓட்டத்தை சீராக்கக் கூடிய பணியைத்தான் இந்த மொபைல் ஸ்ட்ரோக் யூனிட் செய்கிறது. இந்த அற்புதமான முயற்சியை மேற்கொண்ட டாக்டர் நல்ல ஜி பழனிசாமிக்கு என்னுடயை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய சூழ்நிலையில் விழிப்புணர்வு என்பது மிகவும் முக்கியம். பக்கவாதம் நோய் என்ற ஒரு நோய் இருப்பதே தெரியாமல் இருந்த காலகட்டத்தைத் தாண்டி, இன்று அனைத்து நோய்களுக்கும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. அதைத்தான் இதுபோன்ற மருத்துவமனைகள் செய்து வருகின்றன. தொடர்ந்து இதுபோன்ற பணியைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மருத்துவ சேவையைத் தாண்டி சமுதாய சிந்தனையோடு செயல்பட்டு வரும் ஒரு மருத்துவமனையாக இது விளங்கிக் கொண்டிருக்கிறது என்றார்.

இச்சேவை மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்

கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் பேசுகையில்: கே.எம்.சி.ஹெச். அறிமுகப்படுத்தியுள்ள பக்கவாத சேவை மையம், கோவைக்கு பெருமை சேர்க்கக் கூடியதாக இருக்கிறது. கோவையில் பல்வேறு மருத்துவமனைகள் இருந்தாலும், பக்கவாதத்திற்கு மூன்று மணி நேரத்தில் சிகிச்சை அளிக்கக் கூடிய இந்த யூனிட் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். 100 கிமீ தூரத்தில் உள்ளவர்கள் நிச்சயமாக இந்த சேவை மூலம் பக்கவாதத்திலிருந்து குணமடையலாம். இந்த சிறப்பான முயற்சியை மேற்கொண்ட கே.எம்.சி.ஹெச். நிர்வாகத்திற்கும், மருத்துவக் குழுவிற்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.