ஸ்புட்னிக்-வி: டெல்டா வைரஸுக்கு எதிராக 83 % செயல்திறன்

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி டெல்டா வைரஸுக்கு எதிராக 83 % செயல்திறன் கொண்டுள்ளதாக ரஷ்ய சுகாதாரத்துறை மந்திரியான மிக்கெல் முரஷ்கோ தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே வைரஸ் பல்வேறு மரபணு மாற்றங்களை செய்து தன்னை நிலை நிறுத்திக்கொள்ள உருமாற்றம் அடைந்து கொண்டே வருகிறது. அதிலும் ஆவர் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக டெல்டா வகை வைரஸ் பல நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது. எனவே உலக நாடுகள் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது .

இந்த நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் -வி தடுப்பூசியானது இந்த டெல்டா வைரசுக்கு எதிராக 83% செயல்திறன் கொண்டிருப்பதாக ரஷ்ய சுகாதாரத்துறை மந்திரி மிக்கெல் முரஷ்கோ தெரிவித்துள்ளார். இந்த ஸ்புட்னிக் -வி தடுப்பூசி டெல்டா வைரஸுக்கு எதிராக எதிர்பார்த்ததை விட குறைந்த அளவே செயல்திறன் கொண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார் .