ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி 100 % தேர்ச்சி

சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொது தேர்வில் சின்னவேடம்பட்டி ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று தேசிய மற்றும் மாநில அளவில் சாதனை படைத்துள்ளது.

2020-21 ம் ஆண்டிற்கான சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ சைதன்யா டெக்னோ சி.பி.எஸ்.இ. பள்ளி சார்பாக இந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 197 மாணவ, மாணவியர் எழுதினர். இதில் அனைவரும் தேர்ச்சி பெற்று நூறு சதவீதம் தேர்ச்சி விகிதம் என தேசிய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

இதில் மாணவர்கள் அஸ்வந்த், நரேன் மற்றும் மாணவியர்கள் தன்யா, பிரயதர்ஷினி என நான்கு பேர் 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதல் இடத்தையும், நிவேதிதா,அமிர்தா ஆகிய இரு மாணவிகள் 498 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவர்கள் விஜய் வல்லப், நீலேஷ் சரண், ஆகிய இருவரும் 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். 197 பேர் தேர்வு எழுதியதில் 98 சதவீதத்திற்கு மேல் 42 பேரும், 80 சதவீதத்திற்கு மேல் 194 பேர் என தேசிய அளவிலும், மாநில அளவிலும் சாதனை புரிந்துள்ளனர்.

இந்நிலையில், சாதித்த மாணவ மாணவிகளை ஸ்ரீசைதன்யா டெக்னோ பள்ளியின் துணை பொதுமேலாளர் நாகேஸ்வர ராவ், மண்டல பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், மற்றும் பள்ளியின் முதன்மை முதல்வர் மாலதி ராஜா, துணைமுதல்வர் பிருந்தா, மற்றும் அகாடமி குழுவினர்கள் செல்லய்யா, ரவிராஜ், சோபியா மற்றும் ஆசிரியர்கள் என பலரும் பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே மற்றும் ஸ்கேட்டிங் போட்டிகளிலும் ஸ்ரீசைதன்யா மாணவர்கள் வெற்றி பெற்று, விளையாட்டு துறையிலும் சாதனை படைத்துள்ளது குறிப்பிடதக்கது.