ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி, மாயா அகாடெமி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மற்றும் கோவை மாயா அகாடெமி ஆப் அட்வான்ஸ் சினிமேட்டிக்ஸ் நிறுவனத்தின் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (29.07.2021) கையெழுத்தானது.

ஜே.டி. கல்வி பயிற்சி மையத்தின் உறுதுணையோடு கையெழுத்தான இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் பி.எஸ்.சி. தகவல் தொழில்நுட்பத் துறைபயிலும் மாணவர்களுக்கு பல்ஊடகத்துறையில் சிறப்பு பயிற்சியை அளிக்கவுள்ளது. கிராஃபிக் மற்றும் அச்சுவடிவமைப்பு, இணையம் மற்றும் ஊடாடும் வடிவமைப்பு, 2டி மற்றும் 3டி அனிமேசன்ஸ், பிலிம் எஃபெக்ட்ஸ், விரிட்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆகுமெண்ட்ரியாலிட்டி குறித்த பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்குவதோடு மட்டுமின்றி இந்நிறுவனத்திற்கு மாணவர்கள் நேரில் சென்று பயிற்சி பெறவதற்கான வாய்ப்பினையும் அமைத்துக் கொடுத்துள்ளது.

மேலும்,கணினித் துறைப் பேராசிரியர்களுக்கும் சிறப்புப் பயிற்சியை இந்நிறுவனம் வழங்கவுள்ளது. இந்த ஒப்பந்தம் மாணவர்களின் வேலைவாய்ப்பினை உறுதி செய்துள்ளதோடு இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பினைப் பெறவும் துணைபுரியும். எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி. லஷ்மிநாராயணசுவாமி மற்றும் ஜெ.டி. கல்வி பயிற்சி மையத்தின் முதன்மைச் செயலாளர் டாக்டா் சம்ஜித் தனராஜ் ஆகியோர் இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் பி.எல்.சிவக்குமார் மற்றும் தகவல்தொழில் நுட்பத்துறைத் தலைவர் சுமதி ஆகியோர் உடனிருந்தனர்.