30 கிலோமீட்டர் வேகத்தில் தான் இனி பயணிக்க வேண்டும்!

கோவையில் காந்திபுரம்-கணபதி, 100அடி சாலை, கிராஸ்கட், பாரதியார் ரோடு, சுக்ரவார் பேட்டை- மேம்பாலம், வைசியாள் வீதி – செல்வபுரம் ஆகிய பகுதிகளில் 30 கிலோமீட்டர் வேகத்தில் தான் இனிமேல் வாகனங்களை இயங்க வேண்டும் எனவும் அதனை மீறுபவர்களுக்கு அபராதமும் தண்டனையும் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் திங்கட்கிழமை (27.7.2021) உத்தரவிட்டிருந்தார்.

மாவட்ட ஆட்சியரின் இந்த உத்தரவினை தொடர்ந்து அவர் அறிவித்த பகுதிகளில் வேகக்கட்டுப்பாட்டு பதாகைகளை போக்குவரத்து காவல்துறையினர் நட்டினர். இந்த பணியானது 3 நாட்கள் நடைபெறும் என்றும் மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த வேகக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அபராதமும் தண்டனையும் விதிக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர். இதனை தவிர்த்து கோவை மாநகர எல்லைக்குள் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.