திமுகவின் தொண்டனாக பணியாற்றுவேன் – டாக்டர் மகேந்திரன்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் வியாழக்கிழமை (08.07.2021) திமுகவில் இணைந்தார்.

இவருடன் 78 நிர்வாகிகள் மற்றும் 16,188 ஆதரவாளர்கள் திமுகவில் இணைந்தனர். மேலும் இது ஒரு சிறிய துவக்கம் என்றும் இனிவரும் காலங்களில் இது பன்முகமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக முதல்வர் ஸ்டாலின், மூத்த நிர்வாகிகள் மற்றும் தனக்கு முதன்முதலாக அழைப்பு விடுத்த சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினுக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.

மேலும் அவர், திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒரு தொண்டனாக செயல்படுவேன் என்றும் திமுகவின் கொள்கைகளும், சித்தாந்தங்களும் ஏற்கனவே தனக்கு ஏற்றவை என்றும் தெரிவித்துள்ளார்.