ஜப்பானில் அவசர நிலை பிரகடனம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் வருகிற 23-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் டோக்கியோவிற்கு அவசரகால நிலையை ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. இதன்படி வெளிநாட்டு பார்வையாளர்கள் ஒலிம்பிக் போட்டியை காண தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் ஜூலை 12-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்த அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.