அமெரிக்காவில் வீடு வீடாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை

உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவை கண்டு அஞ்சி கொண்டிருக்கும் நிலையில் அனைவரும் அதற்கு தீர்வாக கொண்டிருப்பது தடுப்பூசி ஒன்று தான். இது முழு பாதுகாப்பு கொடுக்கும் என்பதை விட பாதிப்பின் அதிகப்படியான தாக்கத்திலிருந்து தற்காத்து கொள்ள உதவுகிறது.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு இருந்தாலும், ஆங்கங்கே தடுப்பூசி போட தயங்கும் சிலரும் இருக்கின்றனர். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பததை உணர்ந்து அமெரிக்க அதிபர்  ஜோ பைடன் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள உத்திரவிட்டுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கொரோனா தொற்று கட்டுப்படுத்துவது கூறியதாவது: 16 கோடி அமெரிக்க மக்களுக்கு இந்த வார இறுதிக்கும் தடுப்பூசி போடுவதற்கான இலக்கு நிர்ணியக்கப்பட்டுள்ளது.

மேலும், தான் பதவிக்கு வந்தபோது இந்த எண்ணிக்கை 30 லட்சமாக இருந்தது. இன்னும் பல லட்சம் அமெரிக்கர்கள் தடுப்பூசி போடாமல் கொரோனா டெல்டா பிளஸ் தொற்றுக்கு ஆளாகக் கூடிய ஆபத்தில் இருப்பதால் வீடு, வீடாகச் சென்று தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.