மெஷின் லேர்னிங் & ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்: திறன் மேம்பாட்டு பயிற்சி

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி கணினி அறிவியல் துறை சார்பாக “மெஷின் லேர்னிங் & ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்” என்ற தலைப்பில் பேராசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் பாலுசாமி வாழ்த்துரையாற்றினார். இந்த பயிற்சியில் கோவை அம்ரிதா விஸ்வ வித்யபீட நிகர்நிலை பல்கலை கழக கணினி பொறியியல் துறை இணைப்பேராசிரியர் ராஜதிலகம் கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கு திறன் பயிற்சி அளித்தார்.

இந்த பயிற்சியில் மெஷின் லேர்னிங் மென்பொருள்கள் பற்றி ஆசிரியர்களுக்கு செய்முறை மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் அவர் மருத்துவத் துறையில் நோய்கள் பற்றிய ஆராச்சியில் மெஷின் லேர்னிங் மற்றும் அல்க்ரிதம்ஸ் எவ்வாறு பயன்படுகிறது என்பது பற்றி கோடிட்டு காட்டினார்.

ஆசிரியர்கள் மேலும் பயிற்சி பெரும் வகையில் மெஷின் லேர்னிங் பற்றிய சில இணைய தளங்களை குறிப்பிட்டார்.