இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் உணவு வழங்கும் பணி நிறைவு

கோவை இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் ,அரிமா மாவட்டம்,324-B1,ஃபைரா,நேரு நகர் அரிமா சங்கம், எப்.ஓ.பி. அறக்கட்டளை மற்றும் கலாம் மக்கள் அறக்கட்டளை ஆகியோர் இணைந்து மேற்கொண்ட உணவு வழங்கும் பணி இன்று ஐம்பதாவது நாளுடன் நிறைவு பெற்றது.

நோய் தொற்றை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அறிவித்ததால் பசியாற்றுதல் எனும் நோக்கத்தில், இ.எஸ்.ஐ.மருத்துவமனை வளாகத்தில் மதிய உணவு வழங்கும் திட்டத்தை கடந்த மே மாதம்  துவக்கினர்.

அரிமா மாவட்டம் 324-பி1 ஆளுநர் கருணாநிதி, ஃபைரா தேசியத் தலைவர் ஹென்றி, மாவட்ட தலைவர் நேரு நகர் நந்து, மற்றும் அரிமா மாவட்ட 324 பி.1  பி.ஆர்.ஓ.  அரிமா செந்தில்குமார் தலைமையில், நடைபெற்ற இதில், இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அவர்களது உறவினர்கள் என தொடர்ந்து 50 நாட்களாக தினமும் சுமார் 300 பேருக்கு உணவு வழங்கும் பணியை மேற்கொண்டனர்.

மேலும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி 24 மணி நேரம்  இலவச முக கவசங்கள் மற்றும் கபசுரகுடிநீர் வழங்குவதற்கான முகாம் மற்றும் மருத்துவமனை வளாகத்தில் 240 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை தத்தெடுத்து பராமரிப்பது மற்றும் செவிலியர்களுக்கு ஊதியம் வழங்கும் பணியையும் செய்து வந்தனர்.

இந்நிலையில் தொடர்ந்து 50 வது நாளாக மருத்துவமனை வளாகத்தில் உணவு வழங்கும் பணி நடைபெற்றது. இதில் ப்ளூ வேர்ல்டு கார்கோ பங்குதாரர் வெங்கட்டு பங்களிப்பில் இன்றைய உணவு வழங்கப்பட்டது. இதில் மருத்துவமனை டீன் டாக்டர் ரவீந்திரன் கலந்து கொண்டு, வெஜிடபிள் பிரியாணி முட்டையுடன் சுமார் 300 பேருக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கி நிறைவு செய்தார்.

இதில் முருகானந்தம், நக்கீரன், மோகன்ராஜ், கிருஷ்ணமூர்த்தி, எஸ்.கே.எம். சுரேஷ் குமார், தலைவர் நந்தகுமார் , அரிமா வெங்கடேஷ், அரிமா சௌந்தர்ரா,ஜ்  அரிமா சுப்பு, ரவிராஜா, சத்தியமூர்த்தி, கிரீஸ் பிரபாகர் பால்ராஜ் ஆகியோர்  கலந்து கொண்டனர்.