கரும்பூஞ்சை பாதிப்பு: இணையவழி கருத்தரங்கம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும்ஆராய்ச்சிக் கல்லூரியின் நாட்டுநலப் பணித்திட்டம் மற்றும் ரெட் ரிப்பன் கிளப் இணைந்து “BLACK FUNGUS: EPIDEMIC IN A PANDEMIC COMPUTER VISION SYNDROME” எனும் தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் நடத்தியது.

நிகழ்விற்கு முதல்வர் பாலுசாமி தலைமையுரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக Dr. சசிகலா எலிசபெத் அணில்குமார் (Aravind Eye Hospital, Medical Consultant, Paediatric Ophthalmology, MBBS, DNB Ophthalmology) கலந்துகொண்டு தமது உரையில் கண்தொற்று நுண்கிருமி பாதிப்பு பற்றி புகைப்படக் காட்சிகளுடன் விளக்கினார்.

தற்போதைய கண்தாக்குதல் நுண்கிருமியான கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்களையும், பாதுகாப்பு குறித்தும் விரிவாகக் கூறினார்கள். கணினி பயன்பாட்டின் போது இரண்டு 15 நிமிட இடைவெளிகள் கொடுத்துப் பணியாற்றவோ, கற்றலுக்கோ, கற்பித்தலுக்கோ இருக்கக் கூறினார்.

மேலும், இடைவெளியின் போது NIOSH அறிவுறுத்தலின்படி 4 அல்லது 5 நிமிட இடைவெளிகளில் எழுந்து நிற்கவும், கைகள், கால்கள், பின்புற கழுத்து மற்றும் தோள்களை நீட்டவும் பதற்றம் மற்றும் தசைசோர்வு ஆகியவற்றைக் குறைக்கவும் கூறியதுடன் கண்பாதுகாப்பு சார்ந்த அனைத்து செய்திகளையும் மாணவர்களுக்கு விரிவாக எடுத்துக் கூறியதுடன் தமது உரையின் மூலமாக ஆசிரியர் மாணவர்களிடையே எழுந்த ஐயங்களுக்கும், வினாக்களுக்கும் ஆர்வத்துடன் விடை பகிந்தார்.

இந்நிகழ்வில் கல்லூரி துறைசார் புலமுதன்மையர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என 180 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.