“வாத்தி கம்மிங்” பாடலுக்கு நடனமாடிய கொரோனா நோயாளிகள்

கோவை குமரகுரு கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரொனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்க மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு, கொரோனா நோயாளிகளுடன் மருத்துவர்களும் சேர்ந்து ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த மையத்தில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருபவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட அவ்வபோது திரைப்படப் பாடல்கள் ஒலிபரப்பபடுகின்றன. மேலும் திரைப்படப் பாடல்களுக்கு மையத்தில் சிகிச்சை அளிக்கும் மருத்துவகுழுவினர் தொற்று ஏற்பட்டவர்களுடன் இணைந்து நடனமும் ஆடுகின்றனர்.

சிகிச்சை மையத்தில் உறவுகளை பிரிந்து தனியாக இருப்பவர்களுக்கு மன அழுத்ததை போக்கி அவர்களை உற்சாகமாக வைத்திருக்க அவ்வப்போது இது போல நடனமாடி உற்சாகப்படுத்தப்படுவது குறிப்பிடதக்கது.