“பெற்றோர்களை இழந்த குழந்தைகளை பராமரிக்க தயாராகவுள்ளோம்”

கொரோனாவால் தாய், தந்தையரை இழந்த குழந்தைகள், ஆதரவற்றோர்,
முதியோர்கள், பெண்கள், மனநலம் குன்றியவர்களை பிரபஞ்ச அமைதி ஆசிரம காப்பகங்களில் பாதுகாத்து பராமரிக்க தயராக உள்ளோம் என பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் நிர்வாக அறங்காவலர் குருஜி ஷிவாத்மா தெரிவித்துள்ளார்.

நல்ல கவுண்டன் பாளையத்தில் பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் ஆசிரமத்தில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், முதியோர் காப்பகம், பெண்கள் காப்பகம், மாற்றுத்திறனாளிகள் காப்பகம் என பல்வேறு காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 365 பேர் ஆசிரமம் மூலம் பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து குருஜி ஷிவாத்மா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து கூறுகையில்: கொரோனா பேரிடர் கால கட்டத்தில் நம்மால் இயன்ற வரை பிறருக்கு எவ்வளவு உதவ முடியுமா அவ்வளவு உதவிகளை அளித்து அனைவரையும் நன்றாக பாதுகாப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும்.

ஆசிரமத்தை சுற்றியுள்ள கிராம புறங்களில் உள்ள மக்களுக்கு அரிசி, காய்கறிகள், எண்ணெய், முகக்கவசம், சானிடைசர் ஆகியவற்றை வழங்கி விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தி வருகிறோம். ஊரடங்கால் பசியை தணிக்க வழியில்லாது சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கும், பசியோடு தவித்து கொண்டிருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கும் எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம்.

கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள குழந்தைகள் நலக்குழு மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு ஆகிய இரு துறைகளுக்கும் கோரிக்கை வைத்துள்ளோம். தாய்,தந்தையை இழந்த குழந்தைகளுக்கு எந்த காப்பகங்களில் சேர்க்கலாம் என கலந்து ஆலோசிக்குமாறு தெரிவித்து உள்ளோம். நாங்களும், எங்களது காப்பகங்களை தயார் நிலையில் வைத்துள்ளதாக தெரிவித்தார்.