கொரோனா 3-வது அலை குழந்தைகளை தாக்குமா?

கொரோனா மூன்றாம் அலையில் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று கொரோனாவுக்கான தேசிய ஆலோசனைக் குழு தலைவர் என்.கே. அரோரா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் முதல் அலையில் முதியவர்களும், தற்போதைய இந்த இரண்டாம் அலையில் நடுத்தர வயதுப்பிரிவினரும் அதிகளவில் பாதிக்கப்பட்டு, உயிரிழப்பும் அதிகப்படியாக நாடு முழுவதும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்து வரும் 3-வது அலையில் குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மேலும், மூன்றாவது அலையால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பது ஆதரமற்றது என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கொரோனாவுக்கான தேசிய ஆலோசனைக் குழு தலைவர் என்.கே. அரோரா, கொரோனாவிற்கான மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவர்கள் என்பதற்கு எந்த சான்றும் இல்லை என கூறியுள்ளார்.