வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு உதவிய ஜூவல்ஒன் !

கொரோனா பெருந்தொற்று மற்றும் பொது ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கோவை மக்களுக்கு ஜூவல்ஒன் நிறுவனம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் கோவை மாவட்டம் காரமடை, மருதூர் கிராமத்தை சேரந்த பழங்குடி மற்றும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

இதில், 200 குடும்பங்களுக்கு, 10 கிலோ அரிசி, ஒன்றரை கிலோ பருப்பு, ஒரு கிலோ கோதுமை மாவு, இரண்டு கிலோ ரவை, நான்கு சேமியா பாக்கெட்டுகள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் வழங்கியது குறிப்பிடதக்கது.

அதன் தொடர்ச்சியாக ஆதரவற்ற மாற்றுதிறனாளிகள் மற்றும் பார்வையற்றோர்க்கு கரட்டுமேடு, கணபதி, கீரணத்தம், குடிசை மாற்று வாரியம் குடியிருப்பு, புல்லுக்காடு – உக்கடம் பஸ் ஸ்டான்ட் எதிரில், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு, சிங்காநல்லூர், எஸ்.ஐ.எச்.எஸ் (SIHS) காலனி, உப்பிலிபாளையம், என்.கே (MK) பாளையம், வரதராஜபுரம் மற்றும் போத்தனூர் ஆகிய இடங்களில் 17.5.2021 அன்று உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.

காந்திபுரம் கிராஸ்கட் சாலை ஜூவல்ஒன்  தங்கநகை நிறுவன ஊழியர்கள் நேரில் சென்று, 160க்கும் மேலான குடும்பங்களுக்கு உணவு  பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கி அவர்களின் தேவையை பூர்த்தி செய்தனர்.