முதலில் சர்ஜிக்கல் மாஸ்க் பின்னர் துணி மாஸ்க்

  1. இரட்டை முக கவசம் அணியும் பொழுது சர்ஜிக்கல் மாஸ்க் முதலில் அணிந்து பின்னர் துணியிலான மாஸ்க்கை போட வேண்டும்.
  2. சர்ஜிக்கல் மாஸ்க் கம்பியை மூக்கின் மேல் பகுதியில் அழுத்தி இடைவெளியில்லாது பொருத்திக்கொள்ள வேண்டும்.
  3. அதன் பிறகு துணியாலான முக கவசம் அணிந்து இயல்பாக சுவாசிக்க முடிகிறதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவேண்டும்.
  4. 2 சர்ஜிக்கல் மாஸ்க் அல்லது 2 துணி மாஸ்க் அணியக்கூடாது.
  5. அதேபோல் ஒரு மாஸ்க்கை தொடந்து 2 முறை பயன்படுத்தக் கூடாது.
  6. துணியிலான மாஸ்க்கை துவைத்து மறுமுறை பயன்படுத்தலாம். சர்ஜிக்கல் மாஸ்க்கை ஒரு முறை பயன்படுத்திய பிறகு அதனை பயன்படுத்த கூடாது.