கே.பி.ஆர் கல்லூரியில் சித்தர் பாடல்கள் – இணையவழி கருத்தரங்கம்         

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின்  தமிழ்த்துறையின் சார்பில் சித்தர்பாடல்கள்எனும் தலைப்பில் இணையவழி சிறப்புக் கருத்தரங்கம் இன்று (11/05/2021) நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் பாலுசாமி தலைமை தாங்கிச் சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தினராக திருவாரூர், சுபாஷ் சந்திரபோஸ் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர், அறிவழகன் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்.  சித்தர்கள் தங்கள் பாடல்கள் வழி ஞானத்தையும் நிலையாமையையும் முன்னிலைப்படுத்தியமை குறித்தும் இல்வாழ்க்கையில் இருக்கும் இன்பங்களை பற்றி திருவள்ளுவர் கூறிய கருத்துக்களைப் பற்றியும்  விளக்கினார்.

தமிழ் இலக்கியங்களில் சித்தர், சித்து குறித்து எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும் மிக விரிவாக விளக்கியுரைத்தார். மேலும் பாடத்திட்டத்தின் வழிநின்று சித்தர்களின் பாடல்களை கூறி விளக்கமும் கொடுத்தார். இந்நிகழ்விற்கு  370க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.