தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4 ம் தேதி தொடங்குகிறது.  இக்காலகட்டத்தில் மே 11 முதல் 24 ம் தேதி வரை வெயிலின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கும் என காணிக்கப்படுகிறது.

கோடை காலம் துவங்கும் முன்பே மார்ச் மாதத்திலிருந்தே பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது.  மேலும் சில மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டரித்து வருகிறது.

இந்நிலையில் மே 4 ம் தேதி துவங்கும் அக்னி நட்சத்திரம் 28 தேதி வரை தொடர்கிறது.   அக்னி நட்சத்திரத்தால் தற்போது உள்ள வெப்பநிலையை விட வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும். எனவே இக்கால கட்டத்தில் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருப்பது நல்லது.