கொரோனா நோயாளிகளுக்காக  100 மின்விசிறிகளை  வழங்கிய கோவை தம்பதியினர்

கோவையை சேர்ந்த தம்பதியினர் நகையை விற்று  இ.எஸ்.ஐ  மருத்துவமனை கொரோனா நோயாளிகளுக்கு 100 மின்விசிறிகளை வழங்கி உள்ளனர்.

இ.எஸ்.ஐ  மருத்துவமனை  முழுவதும் குளிர்சாதன வசதி கொண்டுள்ளது. ஆனால் கொரோனா காலத்தில் குளிர்சாதனங்களை பயன்படுத்தக் கூடாது என்பதால் நோயாளிகள் போதிய காற்று வசதி இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். இதனையடுத்து அரசாங்கம் சார்பில் 300 மின்விசிறிகள் தரப்பட்டது.

இந்நிலையில் இ.எஸ்.ஐ  மருத்துவக் கல்லூரி முதல்வர்,   விருப்பமுள்ளவர்கள் இ.எஸ்.ஐ  மருத்துவமனைக்கு மின்விசிறிகளை வழங்கலாம் என்றும் கொரோனா காலம் முடிந்தவுடன் விரும்பினால் மின்விசிறிகளை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறியிருந்தார்.

இதனை கேள்விப்பட்டு கோவையை சேர்ந்த தம்பதியினர் , தங்கள் நகைகளை விற்று கொரோனா நோயாளிகளுக்கு 100 மின்விசிறிகளை வழங்கி உள்ளனர்.