தேர்தல் கொண்டாட்டங்களுக்கு தடை

தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு, அரசியல் கட்சிகளின் தேர்தல் கொண்டாட்டங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் இன்று (27.4.2021)தடை விதித்துள்ளது.

கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்திருப்பதற்கு தேர்தல் ஒரு முக்கிய காரணம் என்றும்,  தேர்தல் சமயத்தில் நடந்த அரசியல் கூட்டங்களும், பிரச்சாரத்தின் மூலம் கொரோனா வேகமெடுத்திருப்பதாக  உயர்நீதிமன்றம் நேற்று தனது கண்டனத்தை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தேர்தல் ஆணையம் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது . தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதால் இம்மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையின் போதும்,தேர்தல் வெற்றி கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு கொண்டிருக்கும் போது கூட்டமாக கூடி நின்று தொண்டர்கள் ஆரவாரத்தில் ஈடுபடக் கூடாது.  தேர்தலில் வெற்றி பெற்ற நபர்கள் சான்றிதழை வாங்க வரும்போது கூட்டமாக வராமல், இரு நபர்கள் மட்டுமே அவருடன் வரலாம். வெற்றி பெற்ற நபர் மக்களை சந்திக்க கூடாது. மேலும் தேர்தல் தொடர்பான கூட்டங்கள் போன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு தடை விதித்துள்ளது.