6 நிமிடத்திற்குள் 128 பிரபலங்களின் குரல்களை பேசி இளைஞர் சாதனை

கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் தனியார் கல்லூரியில் படித்து வரும் பாலமுருகன் (19). (சொந்த ஊர் திருச்சி). கடந்த மார்ச் 30 அன்று 5:51 நிமிடத்தில் எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின், சீமான் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் சிவாஜி கணேசன், நம்பியார், ரகுவரன், மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட திரை பிரபலங்கள், சாலமன் பாப்பையா, பெப்ஸி உமா, லியோனி உள்ளிட்ட தொலைக்காட்சி பிரபலங்கள், எம்எஸ்வி,  இளையராஜா, ஏ.ஆர் ரகுமான் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள், தாடி பாலாஜி, ஈரோடு மகேஷ், ராமர் போன்ற தொலைக்காட்சி நகைச்சுவையாளர்கள், சின்சேன், ஜாக்கிச்சான் போன்ற கார்டூன் கதாப்பாத்திரங்கள், அப்துல் கலாம் உட்பட 128 நபர்களின் குரல்களை பேசி அதனை இந்தியா புக் ஆஃப் ரெகார்ட் என்ற நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளார்.

இதனை பரிசீலித்த அந்நிறுவனம் இவருக்கு “அதிகபட்ச முக்கிய நபர்களின் குரல் பிரதிபலிப்பு” என்ற விருதினை வழங்கி கெளரவித்ததுள்ளது. மேலும் இதே நேரத்தில் 128 குரலுக்கும் மேல் பல்வேறு குரல்களை பேசி சாதனை படைக்கும் முயற்சியில் இவர் ஈடுபட்டுள்ளார்.