தெற்கு தொகுதிக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

கோவை தெற்கு தொகுதிக்கான பாஜக தேர்தல் அறிக்கையை, அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சி.டி ரவி இன்று (29.3.2021)வெளியிட்டார்.

தொகுதி முழுவதும் பீரி வை-பை வசதி, திருவள்ளுவர் பெயரில் ஒரு நூலகம், மத்திய சிறைச்சாலை இடமாற்றம் செய்யப்பட்டு, உயிரியல் பூங்கா அமைக்கப்படும், கோவையில் ஐஐஎம் அமைக்கப்படும் ஆகிய வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக அகில இந்திய பொதுச்செயலாளர் சிடி ரவி  பேசுகையில்:

திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்காக தினமும் பொய்களை சொல்லி வருகிறார்  எனவும்,   வேல் விவகாரத்தில் ஸ்டாலின் நாடகமாடி வருகிறார் எனவும், நீட் தேர்வு, ஜல்லிக்கட்டு தடை, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது எனவும், கட்டபஞ்சாயத்து, மின்வெட்டு வேண்டுமென்றால் திமுகவிற்கு வாக்களியுங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை ஆளக்கூடாது என்ற ராகுல்காந்தி கருத்து தவறானது எனவும், ஜனநாயக ரீதியான நடவடிக்கைகளை புரிந்து கொள்ளாமல் பேசுகிறார் எனவும் அவர் தெரிவித்தார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நில அர்ஜிதம் முடிந்த பின்னர் துவக்கப்படும் எனவும், களநிலவரத்திற்கும், கருத்துக்கணிப்புகளுக்கும் வித்தியாசம் உள்ளது. நாங்கள் கள நிலவரத்தை நம்புகிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.