ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் உடன் கூட்டு சேர்ந்து நியோவின் புதிய நியோ எக்ஸ் அறிமுகம்

 நியோ டிஜிட்டல் ஃபிண்டெக் வங்கி, ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மற்றும் விசாவுடன் இணைந்து அதிநவீன மொபைல் வங்கி தீர்வினை தரும் வகையில் புதிதாக நியோ எக்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய துவக்கத்திற்கு முன்னதாக, தேசிய அளவிலான மெட்ரோ மற்றும் மெட்ரோ அல்லாத நகரங்களில் உள்ள மக்களிடம் வங்கித் தேவைகளைப் புரிந்துகொள்ள கோவிட் 19 தொற்று பரவலுக்கு முன்பாக விரிவான ஆய்வுடன் கூடிய சர்வே  ஒன்று மேற்கொள்ளப்பட்டு,   70 % வாடிக்கையாளர்கள்  டிஜிட்டல் வங்கிகளை விரும்புவது ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

இது குறித்து நியோ நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான வினய் பாக்ரி கூறுகையில்:

இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேங்கிங் ஃபிண்டெக் நிறுவனமானது, வாடிக்கையாளர்களின் அனுபவத்தை எளிதாக்குவதையும் மேம்படுத்துவதையும் முதன்மையான நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் மேலும் நியோ எக்ஸ் அறிமுகமானது வங்கியின் டிஜிட்டல் மாற்றத்திற்கான எங்கள் உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்று. ஈக்விடாஸ் எஸ்.எஃப்.பியுடனான பாட்னர்ஷிப்புடன் மிகவும் சிறப்பு மிக்க உற்பத்தியைத் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் எனவும் கூறினார்.

நியோ எக்ஸ் மூலம் சிறந்த சேமிப்புக் கணக்கை, சிறந்த-இன்-கிளாஸ் முதலீட்டுக் கணக்கோடு இணைத்து வழங்குவோம், இவை அனைத்தும் நியோவின் வழக்கமான சிந்தனை மற்றும் மகிழ்ச்சியான பயனர் இண்டர்ஃபேஸ_டன் இணைக்கப்பட்டுள்ளன. இது மிக விரைவில் விரும்பப்படும் வங்கி தயாரிப்பாக மாறும் என்று நாங்கள் முழுமையாக நம்புகிறோம். என்றார்.

ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் தலைமை டிஜிட்டல் அதிகாரி வைபவ் ஜோஷி கூறுகையில்:

வங்கி துறையில் அடுத்த பெரிய மாற்றம் நியோபாங்கிங். புதிய சிந்தனையை வளர்ச்சியை உருவாக்குவதில் நியோவுடன் கூட்டாளராக இருப்பதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.

பயன்பாட்டுத் தேவை உந்துதலால் டிஜிட்டல் வங்கி தயாரிப்புகளை உருவாக்குவதே இன்றைய தேவையாக இருக்கிறது. அதை, எங்கள் நியோபங்க் அண்டு ஃபிண்டெக் திட்டங்களுடன் அதைச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். கூட்டாளர்களுக்கு உதவும் வகையில் விரிவான எபிஐ பேங்கிங் தொகுப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம் என்றார்.