ஸ்ரீ ராமகிருஷ்ணா   கல்லூரிக்கு ரோட்டராக்ட் கிளப் விருது

 ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரியின் ரோட்டராக்ட் கிளப், சிறந்த செயல்பாட்டிற்க்கான சூப்பர் ஆக்ட்டிவ் விருதினை பெற்றுள்ளது.

கோயம்புத்தூர் ரோட்டராக்ட் 3201  அமைப்பு ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் ரோட்டராக்ட் கிளப்புகளுக்கு  சூப்பர் ஆக்ட்டிவ்  விருதினை வழங்கி வருகின்றது.  இவ்விருது வழங்கும் நிகழ்வானது சித்ரா கலையரங்கில் நடைபெற்றது .

இவ்விழாவில் ரோட்டராக்ட்   கிளப்புகளுக்கான பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இவ்வாண்டு செயல்படுத்தப்பட்ட 33 வகையான சிறந்த விழிப்புணர்வு செயல் திட்டங்களில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வு செயல்திட்டம் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு சுகாதார பொருட்களை வழங்கும் ஃ பேப் செயல்திட்டத்தினை செயல்படுத்தியதற்காக ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரியின் ரோட்டராக்ட்   கிளப்புக்கு 2019-2020 ஆம் ஆண்டிற்க்கான சூப்பர் ஆக்ட்டிவ்  விருது மற்றும் வெள்ளி அங்கீகார சான்று வழங்கப்பட்டது.