லேக்டோ கேலமைன் உடன் காஜல் அகர்வால் கூட்டு ஒப்பந்தம்

பிரமல் ஃபார்மா லிமிடெட்-ன் சருமப் பராமரிப்பு ப்ராண்ட்டான லாக்டோ கேலமைன்  முன்னணி திரைப்பட நடிகை காஜல் அகர்வால் உடனான ப்ராண்ட் கூட்டுறவு குறித்து அறிவித்துள்ளது.

பிரமல்-ன் லேக்டோ கேலமைன்   ஆயில் கண்ட்ரோல் லோஷன்கள், சன்ஸ்கிரீன், ஃபேஸ் வாஷ் மற்றும்   ஃபேஷியல் வைப்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய  தயாரிப்புகளை வழங்குகிறது.

இது குறித்து பிரமல் அபார்மா லிமிடெட்டின் தலைவர் நந்தினி பிரமல் கூறுகையில்

“நீண்டகால நம்பகமான மற்றும் பெரும் பலனளிக்கும் சருமப் பராமரிப்பு ப்ராண்டான லாக்டோ கேலமைன், நவநாகரீக உலகின் சமகால அழகுடன் வசீகரிக்கும் காஜல் அகர்வால் இடையே ஒரு ப்ராண்ட் கூட்டுறவின் மூலம் வெற்றிகரமான கூட்டணியை ஒன்றிணைப்பதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.  லாக்டோ கேலமைன், இந்தியாவில் மில்லியன் கணக்கான, விசுவாசமான நுகர்வோரைகளை பெற்றிருக்கிறது, மேலும் பிரமல் தனது தனித்துவமான தயாரிப்புகளை தொடர்ந்து மேம்படுத்தவும் வளப்படுத்தவும் முழு ஈடுபாட்டுடன், அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது என   கூறினார்.

லாக்டோ கேலமைன் உடனான தனது ப்ராண்ட் கூட்டுறவு குறித்து முன்னணி திரைப்பட நடிகை காஜல் அகர்வால் பேசியதாவது, தனிப்பட்ட முறையில்,  சிறுவயதிலிருந்தே பயன்படுத்திய ஒரு நம்பகமான தயாரிப்பான பிரமலின் லாக்டோ கேலமைனுடன் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும், அதிகம் மெனக்கெடாமல், காலம் கடந்தும் வசீகரிக்கும் அழகைப் பெற பெண்கள் தங்கள் அன்றாட அழகு பராமரிப்பை எப்படி பார்க்கிறார்கள் என்பதை, மறுவரையறை செய்யும் இந்த ப்ராண்டின் தொலைநோக்குப் பார்வையை என்னால் அடையாளம் காண முடிகிறது என்றார்.