கோவை சட்டமன்ற தேர்தலில் களமிறங்கிய தொழில்துறை சங்க தலைவர் !

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை கோப்மா சங்க தலைவர் மணிராஜ் இன்று (16.3.2021) தாக்கல் செய்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிடுவதற்கான தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

தொழில் நகரமான கோவையில் ஜிஎஸ்டி பணமதிப்பிழப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால் தொழில் துறையினர் ஏராளமான பாதிப்புகளை சந்தித்தனர். தொழில் துறையைச் சார்ந்த ஒருவரே சட்டமன்ற உறுப்பினராக இருந்தால் தான் கோவை தொழில் துறையை மேம்படுத்த முடியும் என்ற முனைப்பில் கோவை பம்ப்செட் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர் சங்கத்தின் (கோப்மா) தலைவர் மணிராஜ் இந்த தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார். அதன்படி, சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை மணிராஜ் இன்று தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கலுக்கு வரும்போது, மோட்டார் பம்ப் செட்டுடன் வந்து அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தது பொதுமக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.