கோவையில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் எத்தனை பேர் ?

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி துவங்க உள்ள நிலையில்  இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி துவங்கியது.

கோவையில் முதல் நாள் வேட்பு மனு தாக்கலின் போது 10 தொகுதிகளிலும் சேர்த்து 2 பேர் மட்டுமே தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.  மேலும் 13 மற்றும் 14 ஆகிய தேதிகள் விடுமுறை என்பதால் யாரும் வேட்பு மனு தாக்கல்  செய்யவில்லை.

கோவையில் உள்ள 10 சட்ட மன்ற தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் விவரம் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து நேற்று வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. அதன்படி,   கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கும் மொத்தம் 31 பேர் தங்களது வேட்பு மனுக்களை நேற்று தாக்கல் செய்து உள்ளனர்.

இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில்,

கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் தொகுதியில் நேற்று 3 பேரும், சூலூர் தொகுதியில் 3 பேரும், கவுண்டம்பாளையம் தொகுதியில் 5 பேரும், கோவை வடக்கு தொகுதியில் 5 பேரும், தொண்டாமுத்தூர் தொகுதியில் 4 பேரும், கோவை தெற்கு தொகுதியில் 3 பேரும், சிங்காநல்லூர் தொகுதியில் 7 பேரும், பொள்ளாச்சியில் ஒருவரும் என மொத்தம் 31 பேர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து   உள்ளனர் என்றும், மேலும் இதுவரை யாரும் வால்பாறை மற்றும் கிணத்துக்கடவு ஆகிய தொகுதிகளில்   வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்றும் கூறினார்.

இதைத் தொடர்ந்து முதல் நாள் வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் 2 பேரையும் சேர்த்து இதுவரை கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 33 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து உள்ளனர் என்று அவர் கூறினார்.