பெண்களை கௌரவிக்கும் “வொண்டர் வுமன்” விருது

கோவை வொண்டர் வுமன் டிரஸ்ட் சார்பாக கொங்கு மண்டலத்தில் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களை கவுரவிக்கும் வகையில் நான்காவது  ஆண்டாக சிறந்த மகளிர்க்கு விருது வழங்கும் விழா கோவை சரவணம்பட்டி புரோசான் மாலில் இன்று (08.03.2021) நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக எஸ்.என்.எஸ்.கல்வி குழுமங்களின் இயக்குனர் நளின் விமல்குமார், பிரபல தொழிலதிபர் ஆனந்த் பழனிச்சாமி உட்பட முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.

கோவை வொண்டர் வுமன் ஐகான் விருது தொழில் முனைவோரான காந்திமதிக்கும், அம்மா சேவா டிரஸ்ட் நிறுவன தலைவர் சோனாலி பிரதீப்,பெஸ்ட் குழுமங்களின் தலைவர் ஸ்ரீபிரியா கௌரிசங்கர்,முன்னாள் துணை மேயர் லீலாவதி உண்ணி,டாக்டர் உவனேஸ்வரி,ஆகிய ஐந்து மகளிர்க்கு   வழங்கப்பட்டது.

விழாவில் தொழில்முனைவோர், சமூக ஆர்வலர், சிறந்த ஆசிரியை,நுண்கலை, விளையாட்டு, புகைப்படக் கலைஞர், , சுகாதாரப் பணியாளர், வேளாண்மை நிபுணர்,சமையல் கலை என பல்வேறு துறைகளில் சாதித்த மகளிர்க்கு விருது வழங்கப்பட்டது. மேலும் ஒரு ரூபாய் இட்லி பாட்டி என அறியப்படும் கமலத்தாள்  பாட்டிக்கு ஆயுட்கால சாதனையாளர்  விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

இதில் சுபத்ரா, லதா வெண்ணிலா, சஹானாஸ் பர்வீன், மோனிஷா ரவி, அனுஷா பவித்ரா, ரம்யா, திருநங்கை செல்வி, அஸ்வத் பெனாசிர், பிரியா சேவியர், சித்தாரா கார்த்திகேயன், ஜெயஸ்ரீ ஜோதீஸ்வரன், மஞ்சுளா, ராதிகா, சாரு ,பானுமதி, சரண்யா சின்னதுரை, பத்மஜா, ஜெயந்தி, இந்திராணி ராதாகிருஷ்ணா, சபீனா,ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.