நாம் தமிழர் கட்சியின் கோவை வேட்பாளர்கள்

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் சென்னையில் நேற்று (07.03.2021)நடைபெற்றது

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதற்காக ஒவ்வொரு அரசியல் கட்சியும் தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிமுகம் மற்றும் பிரச்சாரம் ஆகிய பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை 234 தொகுதிகளிலும் தொண்டர்களை களம் இறக்குகிறார் அக்கட்சியின்  ஒருங்கிணைப்பாளர் சீமான். 234 தொகுதிகளில் சரிசமாமாக அதாவது 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார் சீமான்.

அதன்படி, கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பில் 6 இடங்களில் பெண் வேட்பாளர்கள் களமிறங்க உள்ளனர்.

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் நர்மதா, தொண்டாமுத்தூரில் கலையரசி,கவுண்டம்பாளையத்தில் கலாமணி, மேட்டுப்பாளையத்தில் யாஸ்மின், பொள்ளாச்சியில் லோகேஷ்வரி, வால்பாறையில் கோகிலா ஆகிய 6 பெண்கள் போட்டியிடுகின்றனர்.

மேலும், ஆண் வேட்பாளர்களாக கிணத்துக்கடவு தொகுதியில் உமா ஜெகதீஸ், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் அப்துல் வகாப், வடக்கில் பாலேந்திரன், சூலூரில் இளங்கோவன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளனர்.