வாக்கு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பும் பணி துவக்கம்

கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு அனுப்பும் பணி மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று (5.03.2021)மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற உள்ள  நிலையில் இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் துரிதமாக  நடைபெற்று வருகின்றன.

கோவை மாவட்டத்தில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுகாதாரத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.தேர்தல் நெருங்கி வரும் சூழலில், வாக்குப்பதிவு இயந்திரங்களை சுகாராரத்துறை அலுவலகத்தில் இருந்து கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அனுப்பும் பணிகள் இன்று துவங்கியுள்ளது. இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு இப்பணிகள் நடைபெறவுள்ளன .

கோவையில்  தேர்தலுக்காக 5 ஆயிரத்து 523 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 7 ஆயிரத்து 414 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 5 ஆயிரத்து 912 விவிபேட் இயந்திரங்களும் உபயோகப்படுத்தப்பட்ட உள்ளன. மேலும் தேர்தல் பணிகளில் 21 ஆயிரத்து 500 அரசுப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.