கோவை நகர மக்களுக்கு ஆடம்பர வில்லாக்களை வழங்கும் காசாகிராண்ட்

கோவை: கட்டுமான துறையில் தென்னிந்தியாவில் முன்னணி நிறுவனமாக திகழும் காசாகிராண்ட், தனது ‘காசாகிராண்ட் சாலிட்டர்’ என்னும் ஸ்பானிஷ் மெடிட்டரேனியன் கட்டுமான பாணியில் அதிநவீன ஆடம்பர வில்லாக்கள் கட்டும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த வில்லாக்கள் கோவை, விஸ்வநாதபுரத்தில் அமைய உள்ளன. இங்கு சுற்றிலும் பசுமை நிறைந்த புல்வெளியில் 2.4 ஏக்கர் நிலத்தில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய 27 உயர்தரமிக்க சொகுசு வில்லாக்கள் கட்டப்பட உள்ளன.

இந்த வில்லாக்கள் அனைத்தும் கீழ்தளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டப்பட உள்ளது. இவை 3 மற்றும் 4 படுக்கை அறைகளை கொண்டிருக்கும். இந்த பிரீமியம் ரக வில்லாக்கள் 2702 சதுர அடி முதல் 3306 சதுர அடி வரை கட்டப்பட உள்ளன.

இந்த புதிய வில்லாக்கள் குறித்து காசாகிராண்டின் கோவை மண்டல மூத்த துணைத் தலைவர் கார்த்திகேயன் கூறுகையில், இங்கு மிகக் குறைந்த விலையில் ஆடம்பர வசதிகளுடன் கூடிய ‘காசாகிராண்ட் சாலிட்டர்’ திட்டத்தை அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த பிரீமியம் ரக வில்லாக்கள் பாரம்பரிய வாழ்க்கை முறையை வழங்கும். பிரதான இடத்தில் கட்டப்பட உள்ள இந்த வில்லாக்களின் விலை மிகக் குறைந்த அளவிலேயே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

65 சதவீத பசுமை புல்வெளியில் இந்த வில்லாக்கள் அமைய உள்ளன. மேலும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கான ஏராளமான வசதிகள் இங்கு இடம் பெற உள்ளன. பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது. இதை பயன்படுத்தித்தான் அவர்கள் அங்கிருந்து வெளியேறவும் உள்ளே வரவும் முடியும். இதன் காரணமாக பாதுகாப்பு என்பது முழுமையாக உறுதி செய்யப்படுகிறது. மேலும் பார்வையாளர்கள் வருகையும் செயலி மூலம் கண்காணிக்கப்படும். இது போன்ற பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளையும் பொழுதுபோக்கு அம்சங்களையும் இந்த வில்லாக்கள் கொண்டிருக்கும் என்று தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி எல்லைக்குள் கட்டப்பட உள்ள இந்த வில்லாக்களை சுற்றி பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் பல்வேறு வசதிகள் உள்ளன. மிக முக்கியமான இடத்தில் அமைய உள்ள இந்த வில்லாக்கள் மூலம் அதிக வாடகை கிடைப்பதோடு எதிர் காலத்தில் இந்த வில்லாக்களை நல்ல விலைக்கு விற்பனை செய்யவும் முடியும். இந்த திட்டம் RERA TN/11/BUILDING/0353/2020 என்ற எண்ணின் கீழ் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடுகள் அடுத்த 24 மாதத்தில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.