ஜெனித் 2017

பிஎஸ்ஜி செவிலியர் கல்லூரியின் சார்பில் 19வது வினாடிவினா ஜெனித் 2017 அண்மையில் பிஎஸ்ஜி மருத்துவ கல்லூரியில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிஎஸ்ஜி செவிலியர் கல்லூரியின் பேராசிரியர் ஸ்ரீ ரஞ்ஜினி, இணை பேராசிரியர் ஜெயந்திசண்முகம் மற்றும் கல்லூரி முதல்வர் ஜெயசுதா வினாடி வினா நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தனர். கங்கா செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்தர் ஜான் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மேலும் பேராசிரியர் மற்றும் மகப்பேறு துறை தலைவர் டாக்டர் சீதா பனிக்கர் கெளரவ விருந்தினராக பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சி மாணவ மாணவிகளின் கல்வித்திறனையும், ஆற்றலையும் வெளிக்கொண்டுவரும் வகையில் உருவாக்கப்பட்டது. இந்த வருடத்திற்கான பாடங்கள் சமூகநல செவிலியர் துறை, மகப்பேறு செவிலியர் துறை மற்றும் பொது அறிவுப் பிரிவுகளில் வினாடி வினா நடைப்பெற்றது.