கே.பி.ஆர் பொறியியல் கல்லூரிக்கு தேசிய விருது!

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் சார்பில் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்லூரியின் முதல்வர் அகிலா கூறியதாவது, அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) தொழில் நிறுவனங்களோடு இணைந்து சிறப்பாகச் செயலாற்றும் தொழிற்கல்வி நிலையங்களுக்கு தேசிய அளவில் விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் 2020ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுக்கு நூற்றுக்கணக்கான பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.  ஒவ்வொரு ஆண்டும் ஏ.ஐ.சி.டி.இ. சி.ஐ.ஐ. கணக்கீட்டின்படி பொறியியல் கல்லூரிகளில் உள்ள 15 துறைகளுக்கு விருது வழங்கப்படுகிறது. அதில் மின்னியல் மற்றும் அதை சார்ந்த துறைகளுக்கான விருதை கே.பி.ஆர், பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி பெற்றுள்ளது.

இந்த விருது பெற்றமைக்காக மின்னியல் மற்றும் மின்னணுத் துறை தலைவர் குமார் சின்னைய்யன் மற்றும் அவரது பேராசிரியர் குழுவினரையும், அவர்களுக்கு ஊக்கம் அளித்து வழிகாட்டிய கல்லூரியின் முதன்மைச் செயலர் ஏ.எம் நடராஜன், முதல்வர் அகிலா ஆகியோரை கே.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.பி.ராமசாமி பாராட்டினார்.