மருத்துவ படிப்பில் சேர்வதற்கு 3 மாணவிகள் விண்ணப்பிக்க தகுதி

கோவை மாநகராட்சி பள்ளியில் படித்த மாணவி, எம்.பி.பி.எஸ் கலந்தாய்வுக்கு பின் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு சட்டம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, கோவை மாநகராட்சி நிர்வாகத்துக்கு உட்பட்ட 16 மேல்நிலைப்பள்ளிகளில் உயிரியல் பிரிவில் பயிலும் 241 மாணவ மாணவிகளில்  ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த சேதா பாக்கியம், அம்மணி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஹேமலதா, ஆர்.எஸ் புரம் மேற்கு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த தாரணி ஆகிய 3 மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மூலம் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றனர். இதில், ஆர்.எஸ் புரம் மேற்கு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த தாரணி சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் படிப்பிற்கான இடம் கிடைத்துள்ளது.