சிஎஸ்பி வங்கியின் மூன்று புதிய கிளைகள் துவக்கம்!

கோவை: சிஎஸ்பி வங்கி லிமிடெட் இந்தியா முழுவதிலும் தனது இருப்பை பரவலாக வலுப்படுத்தும் நோக்கில், முக்கிய பகுதிகளில் தனது செயல்பாடுகளை வலுப்படுத்துகிறது. இவ்வங்கி தனது விரிவாக்க திட்டங்களின் ஒரு பகுதியாக தமிழகத்தில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் தனது புதிய கிளைகளை வங்கி திறந்துள்ளது.

சிஎஸ்பி வங்கியானது பொள்ளாச்சியில் உள்ள மஹாலிங்கம் பொறியியல் கல்லூரியிலும், திருப்பூர் பூலுவப்பட்டி பிரிவிலுள்ள ஸ்ரீ சக்தி வளாகத்திலும் மற்றும் சத்யமூர்த்தி நகரில் உள்ள ஜெ.எம்.ஹெச்.எஸ் பள்ளி அருகில் தனது புதிய கிளைகளை ஆரம்பித்துள்ளன. இந்த மூன்று புதியகிளைகளும் வைப்பு சேவைகள் மற்றும் தங்கக்கடன்களை முழு அளவில் உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன.

சிஎஸ்பி வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் கூறுகையில், எங்களது இலக்கு, இந்தியாவில் வலுவான செயல்பாடுகளை விரிவுப்படுத்துவதே ஆகும். 100 ஆண்டுகள் பாரம்பரிய மிக்க வரலாற்றைக் கொண்ட சிஎஸ்பி வங்கி, வாடிக்கையாளர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட வாய்ப்புகளுடன் கூடிய சேவைகளை வழங்குவதில் பெயர் பெற்றது. இதற்கென அதிக முதலீட்டை மேற்கொண்டுள்ளது. புதிய கிளைகளைத் திறப்பதன் மூலம், காசா மற்றும் தங்ககடன் வர்த்தகங்களைத் தாண்டி, எம்.எஸ்.எம்.இ எனப்படும் சிறு, குறு, மற்றும் தொழில் துறைகள், வேளாண் கடன் உள்ளிட்ட சந்தையில் புதிய வணிக வாய்ப்புகளை மேலும் உருவாக்க முடியும்.

தற்போது, சிஎஸ்பி வங்கி, இந்தியா முழுவதிலும் பரவலாக 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில், 432 கிளைகள், 310 ஏடிஎம்களுடன் வலுவான செயல்பாடுகளைக் கொண்டிருக்கிறது. இந்த புதிய கிளைகள் வேளாண், அக்ரி, எஸ்.எம்.இ, கார்ப்பரேட் மற்றும் என்.ஆர்.ஐ பேங்கிங் உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் வழங்குகின்றன. என்றார்.