டேலி ப்ரைம் அடுத்ததலைமுறை வணிக மேலாண்மை சாப்ட்வேர்

கோவை: இந்தியாவின் முன்னணி வணிக மேலாண்மை சாப்ட்வேர் வழங்கி வரும் டேலி சொல்யூசன்ஸ், அடுத்த புதிய தலைமுறை வணிகத்துக்கான மேலாண்மை சாப்ட்வேர் – டேலி ப்ரைம், ஒன்றை 2020 நவம்பர் 9 ல் அறிமுகம் செய்கிறது. சிறு, நடுத்தர தொழில் நிறுவனத்தினர், புதிய தலைமுறை தொழில் முனைவோர், எளிதாகவும், வலிமையும் கொண்ட தீர்வுகளை பெற்று, தங்களது உற்பத்தி திறனை உயர்த்த இது உதவும்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வணிக தீர்வுகளை அளித்து வரும் டேலி, மேலும், இந்த தீர்வுகளை எளிமைப்படுத்தவும், வணிகத்தை மேம்படுத்த வசதியாகவும்  டேலி பிரைம் அறிமுகமாகிறது. புதிய  தொழில்நுட்பங்களையும், கணக்கு பராமரிப்பு பற்றி அறியாமல் இருந்தாலும் இதை எளிதாக பயன்படுத்திக் கொள்ள முடியும். இதுவரை பயன்படுத்தியவர்களின் அனுபவத்தைக் கொண்டு, ஒருங்கிணைந்த திட்டத்தில் முதலாவது வெளியீடு வருகிறது.

பாதுகாப்பாகவும் தனிப்பட்ட முறையிலும் வாடிக்கையாளர்கள் எங்கும் எளிதாக பயன்படுத்தும் வகையில் இருக்க மாபெரும் முதலீட்டில் இது உருவாக்கப்பட்டுள்ளது. சில்லறை விற்பனை  போன்ற புதிய பிரிவுகள் மற்றும் ஒருங்கிணைந்த தயாரிப்பாக, வணிக மேம்பாட்டு இணைப்புக்கு இது உதவும். சர்வதேச அளவில் வலுவாக காலூன்றியுள்ள இந்த நிறுவனம், தனது விரிவாக்க நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டு வருகிறது.

கோவையில் தற்போது ஆயிரக்கணக்கான வணிகத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. டேலி பிரைம், ஆன்லைன் நிகழ்வுகள், காணொலி கருத்தரங்குகள், ஒருவருடன் ஒருவர் நேரடியாக பேசவும், உதவிகளை பெறும் வகையிலும் தானியங்கி முறையை நோக்கி பயணத்தை  மேற்கொண்டுள்ளது. கூடுதலாக, டேலி நிறுவனம், தனது பங்குதாரர்களை டிஜிட்டல் மார்க்கெட்டிங் கருவிகளான பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்றவைகளிலும் பயிற்சி அளித்து வருகிறது. அதிகபட்ச வாடிக்கையாளர்களை சென்றடையவும், பயிற்சி அளிக்கவும், வாடிக்கையாளர்களின் சந்தேகங்களை தீர்க்கவும், வெளிப்படையாக வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்யவும் இது உதவும்.

டேலி சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தேஜஸ் கோயாங்கோ அறிமுகப்படுத்தி  பேசுகையில், ’’கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல லட்சக்கணக்கான வணிக உரிமையாளர்கள், பணியாளர்கள், கணக்காளர்களுக்காக புதுமையான, எளிமையான, வலிமையான தீர்வுகளை அளித்து, அவர்களின் வணிக மேம்பாட்டிற்கு உதவியுள்ளோம். இனி வரும் நாட்களில் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் வணிக இயக்கத்தை எளிமையாக மேற்கொள்ள மேலும் இது உதவிகரமாக இருக்கும். சிறிய, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி, பல தொழில் நிறுவனங்கள் நோய் தொற்றால் பாதிப்படைந்திருந்தாலும், வரும்நாட்கள், எதிர்காலம் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். புதிய தலைமுறை தொழில்நுட்பங்களால் தொடர்ந்து ஆதரவளித்து, அவர்களது வணிகத்தை மேம்படுத்த  உதவி செய்ய பணியாற்றி வருகிறோம்,’’ என்றார்.

டேலி பிரைம் ரிலீஸ் 1.0 பல்வேறு புதிய சிறப்பம்சங்கள் மற்றும் ஒவ்வொரு நாளும் தொழில் முனைவோருக்கும், அவரது கணக்காளர்களுக்கும் ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய ‘கோ டூ’ என்ற புதிய அடிப்படை, அடுத்த கட்டத்திற்கு அறிக்கை ஆய்வை எடுத்துச்  செல்கிறது. எளிமையாக்கப்பட்ட டேட்டா பதிவு, விரைவாகவும் வணிகத்தின் தேவைக்கு ஏற்றவாறும் அமைந்துள்ளது. பன்னோக்கு பொருள் தேடும் பணியும், முன்னோட்டத்தில் பயன்படுத்தியவர்கள் அனுபவம், பாராட்டுக்களை பெற்றுள்ளது. எதிர்காலத்திற்கு ஏற்றவாறு விரிவுபடுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு அம்சங்கள், ஏற்கனவே உள்ள கட்டமைப்பில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாத வகையில் இருக்கும். எளிதாக புதிய வெளியீட்டில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்கென சிறப்பு பயிற்சியோ, திறனோ, கற்கவோ வேண்டிய அவசியம் இல்லை.