நடமாடும் இலவச மோடி சேவை மையம்

தமிழகத்தில் முதன்முறையாக பொதுமக்கள் பயன்பெறும்  விதமாக நடமாடும் இலவச மோடி சேவை மையம் கோவை தெற்கு மாவட்ட பாஜக.சார்பாக துவங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் நலன் கருதி நடமாடும் இலவச மோடி சேவை மையம் கோவை தெற்கு மாவட்ட பாஜக. சார்பாக துவங்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா கோவை ஈச்சனாரி பகுதியில் நடைபெற்றது. கோவை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் வசந்த ராஜன் தலைமையில் நடைபெற்ற இதில் வெற்றிவேல், ரத யாத்திரையின் பொறுப்பாளரும், தெற்கு மாவட்ட பார்வையாளருமான மோகன் மந்திரச்சாலம் ஆகியோர் நடமாடும் இலவச மோடி சேவை மையத்தை துவக்கி வைத்தனர்.

இந்த நடமாடும் சேவை மையத்தில் ரூ.5 லட்சத்துக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம், மோடி அரசின் சிறு விவசாயிகளுக்கான வருடம் ரூ.6000 திட்டம், மத்திய அரசின் விவசாய கடன் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வருமானச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வாரிசுசான்றிதழ், வசிப்பிடச் சான்று மற்றும் விதவை சான்றிதழ் உள்ளிட்ட இ-சேவை மையங்கள் மூலம் பெறப்படும் அனைத்து சேவைகளும் இதில் இலவசமாக கிடைக்கும் வகையில் கிராமப்புற மக்கள் பயன்மெறும் வகையில் துவங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் சந்திரசேகர், துணைத் தலைவர்கள் துரை, சிவக்குமார் மற்றும் பொருளாளர் கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.