தீபாவளி கதர் விற்பனை இலக்கு ரூ. 2.57 கோடி

கோவை மாவட்டத்திற்கு 2020-2021 ஆம் ஆண்டிற்கு ரூ.2.57கோடி கதர் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டள்ளது என உதவி இயக்குநர் (கதர் கிராமத் தொழில்கள்) கிரிஅய்யப்பன் தலைமையில் செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் உதவி இயக்குநர் (கதர் கிராமத் தொழில்கள்) செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், கோவை மாவட்டத்திற்கு 2020-21ம் ஆண்டிற்கு ரூ.2.57கோடி கதர் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர், பட்டு, பாலியஸ்டர் ரகங்களுக்கு 30 சதவிகிதமாகவும், உல்லன் ரகங்களுக்கு 20 சதவிகிதமாகவும் சிறப்புத்தள்ளுபடியினை  அரசு அளித்துள்ளது. கிராமப்புறங்களில் உள்ள நூற்போர், நெசவாளர்களைக்கொண்டு தற்கால நாகரீகத்திற்கு ஏற்றவாறு புதிய வடிவமைப்புகளில் அழகிய வண்ணங்களில் மிக நேர்த்தியான முறையில் நெசவு செய்யப்படும் கதர் ஆடைகளும், கிராமங்களில் வாழும் கைவினை கலைஞர்கள் மூலம் புதிய உத்திகளுடன் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களும் கதர் அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றது.

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் கோவை மாவட்டத்திற்கு கதர் விற்பனை குறியீடாக ரூ.2.57கோடி நிர்ணயம் செய்துள்ளது. இக்குறியீட்டை அடைய அவினாசி ரோடு தண்டுமாரியம்மன் கேவில் அருகில் செயல்பாடும் கதர் கிராப்ட், ஆர்.எஸ்.புரத்தில் தபால் அலுவலகம் எதிரில் செயல்படும் காதி கிராப்ட் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பழைய பேருந்து நிலையத்தில் செயல்படும் காதி கிராப்ட்களின் மூலம் விற்பனை நடைபெற்று வருகிறது. இக்காதி கிராப்ட்களில் சோப் வகைகள், தேன், தோல் காலணிகள் மற்றும் பூஜை பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அவினாசி மேம்பாலம் கீழ் தண்டுமாரியம்மன் கோவில் அருகில் செயல்படும் காதி கிராப்ட் வளாகத்தில் நவம்பர் மாதம் 7,8,9 ஆகிய தேதிகளில் சிறப்பு விற்பனை நடைபெறவுள்ளது. பொதுமக்கள், கிராமப்புற ஏழை பெண்களின் மேம்பாட்டு நலனைக் கருதியும், சிறுதொழில் வல்லுநர்களை ஊக்குவித்து ஆதரவு தரும் வகையில், தள்ளுபடி சலுகையைப் பயன்படுத்தி கதர் ரகங்கள் அதிக அளவில் வாங்கி பயனடைய வேண்டும். என உதவி இயக்குநர் (கதர் கிராமத் தொழில்கள்) கிரிஅய்யப்பன் செய்தியாளர் பயணத்தின் போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.