கலாம் மக்கள்அறக்கட்டளை சார்பில் திருநங்கை மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

கோவையில் மறைந்த அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு கலாம் மக்கள் அறக்கட்டளை, நேரு நகர் அரிமா சங்கம், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சார்பில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் திருநங்கை ஆகியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

காந்திபுரம் இரண்டாவது வீதி பகுதியில் உள்ள கலாம் அறக்கட்டளை அலுவலகம் முன்பாக அறக்கட்டளையின் தலைவர் செந்தில் குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கோவை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை உதவி ஆணையாளர் பெரியசாமி, கோவை மாவட்ட அரிமா சங்க முதல் நிலை ஆளுநர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலாம் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கி அந்த பகுதியில்  உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பவித்ரா என்ற திருநங்கை ஒருவருக்கும் இலவச  அரிசி முட்டைகள்  வழங்கப்பட்டது.

தொடர்ந்து அந்த பகுதி பொதுமக்களுக்கு இலவச முகக்கவசங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரேஸ் கோர்ஸ் காவல்நிலைய போக்குவரத்துஉதவி ஆய்வாளர் ராக்கி ராஜேஷ் மற்றும் அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, வெங்கடேஷ், சுப்ரமணியம், யுவராஜ், செல்வராஜ், ஸ்ரீஹரி, கிரீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.