விளக்கு திருவிழா கண்காட்சி மற்றும் விற்பனை

கைவினைப்பொருட்கள் உலகில் தனியானதொரு இடத்தைப் பிடித்துள்ள, பூம்புகார் என்ற பெயரால் அனைவராலும் அறியப்படும், தமிழ்நாடு அரசு நிறுவனமான, தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சிக்கழகம், ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக்காலங்களில்  பல கண்காட்சிகளை நடத்தி வருகிறது அதைப்போல் இந்த ஆண்டும் “விளக்கு திருவிழா  கண்காட்சி மற்றும் விற்பனை”  15.11.2017  முதல்  02.12.17  வரை  தினசரி  காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை  நடைபெறுகிறது.

இக்கண்காட்சியினை கோவை உதவி ஆட்சியர் (பயிற்சி), ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் கண்காட்சியினை  துவக்கி வைத்தார்.

இக்கண்காட்சியில்    பித்தளையில்  காமாக்ஷி தீபம், நந்தா தீபம், மலபார் தீபம், அஷ்டோத்திர தீபம், லக்ஷ்மி தீபம், அன்னம் மேஜை விளக்கு, அன்னம் தொங்கு விளக்கு, தூண்டா விளக்கு, பாலாடை விளக்கு, லக்ஷ்மி தாமரை விளக்கு, அடுக்கு தீபம், குபேர தீபம், உடுப்பி கண்ணாடி விளக்கு,பஞ்சலிங்க தீபம், பஞ்சாட்சர தொங்கு விளக்கு, கிளி விளக்கு, அகல் விளக்கு, இரட்டை தகலி விளக்கு, சங்கு சக்கர தொங்கு விளக்கு, அன்னம் சாதா மற்றும் நகாஸ் விளக்குகள்,  பலவகை மண் விளக்குகள், வாசனை மெழுகுவர்த்திகள், மாகல் விளக்குகள் இன்னும் ஏராளமான விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த வருட கண்காட்சியின் சிறப்பு அம்சமாக கோவையில் முதன்முறையாக 8 அடி பித்தளை கிளை விளக்கு ருபாய் 4.23 லட்சம் விலையில் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கபட்டுள்ளது.

விற்பனைக்கு உள்ள கைவினைப்பொருட்களை கோவை மாநகர மக்கள்வாங்கி பயன் பெறுவதுடன் இக்கலைப்பொருட்களை உற்பத்தி செய்யும் கைவினைஞர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் உதவுகிறது.

இக்கண்காட்சி மூலம் ரூபாய் 20.00 இலட்சம் விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது.

விற்பனை செய்யப்படும் அனைத்து  விளக்குகளுக்கும் 10 முதல் 20  சதவிகிதம் வரை சிறப்புத்தள்ளுபடி வழங்கப்படுகிறது. அனைத்து கடன் அட்டைகளும் எவ்வித சேவைக்கட்டணமுமின்றி ஏற்றுக்கொள்ளப்படும்.