ரூ.4 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்தார் அமைச்சர்

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில் ரூ.4 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளுக்கான பூமி பூஜையினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்து, பாலக்காடு மெயின் ரோடு சுகுணாபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இ-சேவை மையத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.78-க்குட்பட்ட தேவேந்திர வீதி, நாடார் வீதி, பிள்ளை வீதி, போயர் வீதி ஆகிய பகுதிகளில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.29.00 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கும், வடக்கு ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.25.00 லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிக்கும் பூமி பூஜையினை அமைச்சர் துவக்கி வைத்தார்.

பின்னர், வார்டு எண்.77க்குட்பட்ட ரங்கசாமி காலனி மற்றும் ராஜரத்தினம் நகர் பகுதியில் சி.எப்.சி திட்டத்தின்கீழ் ரூ.52.00 லட்சம் மதிப்பீட்டிலும், ராமமூர்த்தி லிங்க் ரோடு (மாசாணியம்மன் கோவில் ரோடு) பகுதியில்; ரூ.40.00 லட்சம் மதிப்பீட்டிலும், அய்யாவு பண்ணாடி வீதி மற்றும் பிரைட் கார்டன் பகுதியில் ரூ.37.00 லட்சம் மதிப்பீட்டிலும், கருப்பண்ணன் பாதை பகுதியில் ரூ.37.00 லட்சம் மதிப்பீட்டிலும், அன்னை இந்திரா நகர் பகுதியில் ரூ.60.00 லட்சம் மதிப்பீட்டிலும், பாலாஜி நகர் மற்றும் சண்முகா நகர் பகுதியில் ரூ.28.00 லட்சம் மதிப்பீட்டிலும், வார்டு எண்.78 வடக்கு ஹவுசிங் யூனிட் பகுதியில் ரூ.32.00 லட்சம் மதிப்பீட்டிலும், வார்டு எண்.79 லாலி ரோடு, ராஜாத்தியம்மாள் லே-அவுட், முனியப்பன் கோவில் வீதி, மாரியம்மன் கோவில் வீதி ஆகிய பகுதியில் ரூ.75.00 லட்சம் மதிப்பீட்டிலும் தார்சாலைகள் புதுப்பிக்கும் பணிகளுக்கான பூமி பூஜையினையும், ஆகமொத்தம் ரூ.4 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டிலான வளர்ச்சிப் பணிகளுக்கான பூமி பூஜையினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்த பின்னர் பூமி பூஜை செய்த அனைத்து இடங்களிலும் பொதுமக்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சிகளில், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன், துணை ஆணையாளர் மதுராந்தகி, மாநகரப் பொறியாளர் லட்சுமணன், தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி, செயற்பொறியாளர் ஞானவேல் மற்றும் உதவிப் பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் மண்டல சுகாதார அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.