பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் கோவையில் கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டம்

தமிழகத்தில் வருகிற 1ம் தேதி முதல் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், கோவையில் கூடுதலாக 300 பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.  ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்ற இந்நிலையில் தமிழக அரசு வருகிற 1-ந்தேதி முதல் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்து உள்ளது.

எனவே பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் மாணவ, மாணவிகள் தங்கள் படிக்கும் பள்ளிக்கு சென்று வர வசதியாக கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழக சார்பில் கோவையில் இருந்து வருகிற 1-ந்தேதி முதல் கூடுதலாக 300 பஸ்கள் டவுன் பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா தொற்று காரணமாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு நடப்பாண்டிற்கான இலவச பஸ் பாஸ் வழங்கப்படவில்லை. இருப்பினும் மாணவ மாணவிகள் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட இலவச பஸ் பாஸ் காண்பித்தால் போதுமானது.

மேலும் மாணவர்கள் சீருடையில் இருந்த அவரிடம் டிக்கெட் கட்டணம் கேட்கக்கூடாது என்று கண்டக்டர் களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீருடை இல்லாத மாணவ மாணவிகள் தங்கள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரும் அங்கு படிப்பதற்கான சான்றிதழ் பெற்றிருந்தால் போதுமானது எனவே மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிக்கு செல்ல இலவச பஸ் பாஸ் பயணம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.