கோவையில் இன்று 524 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவையில் கடந்த மாதம் 31ம் தேதி முதன்முறையாக கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 500ஐ கடந்து அதிகரித்தது. அன்றைய தினம் கோவையில் 589 பேருக்கு தொற்று உறுதியானது.

இதனைத்தொடர்ந்து, செப்டம்பர் 1ம் தேதி 581 பேருக்கும், 2ம் தேதி 579 பேருக்கும் 3ம் தேதி 593 பேருக்கும், 4ம் தேதி 595 பேருக்கும், 5ம் தேதி 545 பேருக்கும் நேற்று 538 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

இதனைத்தொடர்ந்து, இன்றும் தொற்று பாதிப்பு 500ஐ கடந்துள்ளது. இன்று மட்டும் கோவைய்ல் 524 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 8 நாட்களில் மட்டும் கோவையில் கொரோனா வைரஸ் தொற்றால் 4 ஆயிரத்து 544 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 34 வயது பெண் மருத்துவர், 40 வயது செவிலியர், வெள்ளலூர் அதிவிரைவுப் படையை சேர்ந்த 34, 47 வயது வீரர்கள், இ.எஸ்.ஐ. மருத்துவமனையை சேர்ந்த 57 வயது பெண் மருத்துவப் பணியாளர், கோவை மாநகர் பகுதியை சேர்ந்த 34 வயது ஆண் காவலர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதன் மூலம் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 479 ஆக அதிகரித்துள்ளது.

இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி 4 பேர் உயிரிழந்தனர். இதுவரை கோவையில் 332 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 666 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். கோவையில் தற்போது 4 ஆயிரத்து 680 பேர் சிகிச்சையில் உள்ளனர்.