மூன்றாவது நாளாக இன்றும் 500 கடந்த கொரோனா தொற்று !

கோவையில் மூன்றாவது நாளாக இன்றும் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 579 பேருக்கு இன்று (2.9.2020) கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள ஜி.எஸ்.டி. பவனில் பணியாற்றி வரும் 22, 33 வயது ஆண்கள், 25, 50 வயது பெண்கள், காந்திபுரம் காவலர் குடியிருப்பை சேர்ந்த 31 வயது ஆண் காவலர் ஆகியோருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தவிர மேட்டுப்பாளையத்தில் 30 பேர், சூலூரில் 27 பேர், பொள்ளாச்சியில் 19 பேர், செல்வபுரத்தில் 17 பேர், ராமநாதபுரத்தில் 15 பேர், காரமடையில் 12 பேர் உள்பட 579 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 662 ஆக உயர்ந்துள்ளது.

கோவையில் கடந்த மூன்று நாள்களில் மட்டும் 1,749 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டு 5 பேர் பலியாகியுள்ளனர். கோவையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 315 ஆக உயர்ந்துள்ளது.