பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் தேசிய கண்தான இருவார விழா

இருள் அடைந்த வீட்டில் ஒளி ஏற்றினாலே அதன் மூலம் ஏற்படும் ஆனந்தம் அளவற்றதாக இருக்கும். அதுவே பார்வையற்ற ஒருவருக்கு தனது வாழ்நாளிற்கு பிறகு ஒருவரின் வாழ்கையில் ஒளியேற்றி மகிழ்விக்க முடியும் என்றால் அது எந்த அளவிற்கு மகிழ்ச்சியை அளிக்கும் ஒன்றாக இருக்கும். அது கண் தானத்தால் மட்டுமே முடியும்.

அப்படிப்பட்ட இதனை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் செப்டம்பர் 8 ஆம் தேதிவரை தேசிய கண்தான இருவார விழா பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கடைபிடிக்கப்படுகிறது.

மற்ற உறுப்பு தானங்களில் முன்னோடியாக இருக்கக்கூடிய தமிழகம் தான், கண் தானத்திலும் முன்னிலையில் உள்ளது. கண்தானம் செய்வதன் மூலம் ஒருவரது பார்வையை மட்டுமல்ல, வாழ்க்கையையும் மீட்டுத்தர முடியும்.

கண்தானம் செய்ய விரும்புபவர்கள் அருகிலுள்ள கண் வங்கியைத் தொடர்பு கொண்டு தானம் செய்வது குறித்து தெரிவிக்கலாம், அல்லது ஒருவர் இறந்த பின் அவரது உறவினர்கள் கண்வங்கிக்கு தகவல் தெரிவித்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் குழு கண்தானம் செய்பவர்கள் நமது இடத்திற்கே வந்து பெற்றுகொள்வார்கள்.

கண்ணாடி அணிந்தவர்கள், புரை அறுவை சிகிச்சை மேற்கொண்டோர் என எல்லா வயதினரும் கண்தானம் செய்யலாம்.

இதில் சிறப்பாக செயல்பட்டு வரும் பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் கண் வங்கி 24 மணிநேரமும் இயங்கி வருகிறது. மேலும் விவரங்களுக்கு பி.எஸ்.ஜி. மருத்துவமனை கண் மருத்துவப் பிரிவைத் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண் 8220013330.