வீட்டில் செய்யும் அலுவலகப்பணியினால் அதிக களைப்பு உண்டாவதற்கு இதான் காரணம் !

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பலர் தங்களது வீட்டில் இருந்தபடியே அலுவலக பணிகளை செய்து வருகிறார்கள். ஆனால் இது அலுவலகத்தில் இருப்பதைவிட வீட்டில் செய்யும் போது பலருக்கு களைப்பு உண்டாகிறது. இதற்கு நாம் செய்யும் தவறுகள்தான் காரணம்.

நம்மில் பலர் வீட்டில் தானே வேலை செய்கிறோம் என்று காலை எழுந்ததும் லேப்டாப்பைத் திறந்து வேலை செய்ய தொடங்குகின்றனர், இது நீங்கள் செய்யும் பெரிய தவறாகும். நாம் எப்பொழுதும் போல் காலை வேலைக்குச் செல்ல எழுவதுபோல் எழுந்து காலைக்கடன்களை முடித்து, குளித்து காலை உணவை உண்ட பின் பணியைத் துவங்கினால் உடல் சோர்வு குறையும். அவ்வாறு செய்யாமல் நாம் கட்டிலில் அமர்ந்தபடி சௌகரியத்திற்கு ஏற்ப வேலை செய்வது உடல் களைப்பை உண்டாக்கும். அதோடு தூக்கத்தையும் வரவழைக்கும்.

அதுமட்டுமின்றி இடைவேளை இல்லாமல் வேலை செய்வதும் ஆபத்துதான். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் பேசுவது, டீ அருந்தச் செல்வது என இருப்போம். ஆனால் வீட்டில் இருப்பதால் நாம் இருக்கும் இடத்திற்கு டீ வரும், நாமும் நீண்ட நேரம் அமர்ந்தே வேலை செய்து வருவோம். அவ்வாறு செய்வது தவறு. இரண்டு நிமிட நடை, உடலை அவ்வப்போது ஸ்ட்ரெட்சிங் என சிறு சிறு உடல் அசைவுகளைச் செய்யவேண்டும்.